| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a காலாரி (காலசம்ஹாரமூர்த்தி) |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a அட்ட வீரட்டர்களில் ஒருவராக மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்த காலசம்ஹாரமூர்த்தி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து, காலன் மேல் இடது காலை வைத்து மிதித்து, வலது காலை உயர்த்தி தூக்கி, இடது காலை ஊன்றி ஊர்த்துவஜானுவில் வைத்து, யமனை எச்சரிக்கும் நிலையில் உள்ள அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி நான்கு திருக்கைகள் பெற்றுள்ளார். பின் வலது கை உடுக்கையை பிடித்தவாறும், முன் இடது கை தலையைக் கொய்யும் முத்திரையிலும், பின் இடது கை சூலத்தை ஏந்தியவாறும், முன் வலது கை தண்டிக்கும் முத்திரை கொண்டும் அமைந்துள்ளன. இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் மரண பயங்கொண்டு தலையைத் திருப்பி சிவனாரைப் பார்த்தபடி ஓடும் நிலையில் உள்ளான். எமனின் தலைக்கு மேலே அவனின் வாகனமான எருமை காட்டப்பட்டுள்ளது. இறையனாரின் வலது காலருகே இரண்டு கணங்கள் அமர்ந்துள்ளன. அதில் பெரிய வடிவாக காட்டப்பட்டுள்ள கணத்திற்கு குரங்கு முகம் உள்ளது. காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாபந்தம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகளில் வலதில் மகர குண்டலமும், இடதில் பத்ரகுண்டலமும் அணிந்துள்ளார். கழுத்தில் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் உருட்டிய விழிகளுடன் கோபக்கனலில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளார். |
| 653 | : | _ _ |a காலாரி, காலாந்தகமூர்த்தி, காலசம்ஹாரமூர்த்தி, மார்க்கபந்து, மார்க்கண்டேயன், அட்டவீரட்டானர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில், சோழ மண்டலம், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
| 752 | : | _ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
| 905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
| 914 | : | _ _ |a 10.97344457 |
| 915 | : | _ _ |a 78.38864207 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000146 |
| barcode | : | TVA_SCL_000146 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |